பொரளை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி சிகிச்சை பலனின்றி மரணம்!

விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரளை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி சரத் சந்திர (வயது – 51) நேற்றிரவு 8.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொறுப்பதிகாரி கடந்த 24ஆம் திகதி பம்பலப்பிட்டிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, டிபென்டர் வாகனம் ஒன்று மோதியது. இவர் மீது மோதிய டிபென்டர் வாகனம் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றிருந்தது.

இந்தச் சம்பவத்தையடுத்து, டிபெண்டர் வாகனத்தின் சாரதி உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். எனினும், சாரதி மட்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஏனைய 7 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களுள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகனும், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுமிந்த ஆட்டிகலவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *