ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரிய  பயிலுனர்கள் (மாணவர்கள்) இன்று (06) வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியின் அலுவலகத்துக்குள் மது அருந்திய  பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக வெளியேற்றுமாறு கோரியும், தமக்கு சுத்தமான உணவு வழங்கப்படாததற்கு எதிர்ப்பை தெரிவித்துமே மாணவர்களால் போராட்டம் முன்னெடுடக்கப்பட்டுவருகின்றது.
அசுத்தம் காரணமாக, பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறை நேற்று மறுஅறிவித்தல்வரும்வரை ‘சீல்’  வைத்து மூடப்பட்டது.

கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி,  பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரைக்கமையவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  நேற்று இரவும், இன்று காலையும் தமக்கு உணவு வழங்கப்படவில்லை என  ஆசிரியர் பயிலுனர்கள் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், கல்லுரியின் பதிவாளர் உள்ளிட்ட சில அதிகாரிகளின் நடத்தை சரியில்லாததால் அவர்களை உடனடியாக நீக்குமாறும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரபும் எனவும் மாணவர்கள் சூளுரைத்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *