மஹிந்த வீட்டு திருமணத்துக்கு ஏன் தாமதமாக வந்தீர்? மனம் திறந்தார் பஸில்!

மஹிந்த ராஜபக்சவின் கடைக்குட்டி மகனின் திருமண நிகழ்வில் பஸில் ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை என்றும், ராஜபக்ச குடும்பத்துக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் சமூக வளைத்தலங்களில் பலகோணங்களில் தகவல்கள் வெளியாகின.

மஹிந்தவின் இளைய புதல்வர் ரோஹிதவின் திருமணம் கடந்த வியாழக்கிழமை மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

எனினும், காலைவேளையில் பஸில் ராஜபக்ச பங்கேற்றிருக்கவில்லை. சமூகவலைத்தளங்களில் வெளியான படங்களிலும் அவரின் புகைப்படம் இருக்கில்லை.

இதனால், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ராஜபக்சக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் பஸில் நிகழ்வை புறக்கணித்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றுமாலைதான் பஸிலின் புகைப்படம் வெளியானது.  எனவே, ஏன் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவில்லையென அவருக்கு நெருக்கமான சிரேஸ்ட தமிழ் ஊடகவியலாளரொருவர் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பஸில்,

” ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பி.,  ரோஹித்த அபேகுணவர்தனவின் புதல்வி நிதினியின் திருமண நிகழ்வும் அன்றைய தினத்தில்தான் கொழும்பில் நடைபெற்றது.

அதில் பெண் வீட்டார் சார்பில் சாட்சியாக கையெழுத்திட வேண்டியிருந்தமையால் தங்காலைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தாதமித்தே சென்றேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *