மிக எளிமையான முறையில் நடைபெற்ற மஹிந்தவின் கடைக்குட்டியின் திருமணம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார்.

அவரது நீண்டகால காதலியான டட்யான லீ என்பவரையே பெரியோர்களின் ஆசீர்வாதத்துடன் ரோஹித ராஜபக்ச இன்று கரம் பிடித்துள்ளார்.

ராஜபக்சவின் குடும்ப கிராமமான வீரக்கெட்டியவில் ரோஹிதவின் திருமண நிகழ்வுகள் நடைபெற்றன.

திருமண வைபவம் வேறு அரசியல்வாதிகளின் வாரிசுகளின் திருமணம் போன்று 5 நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்படவில்லை. மிகவும் எளிமையான முறையில் வீரக்கெட்டிய கிராமத்தில் மெதமுல வீட்டில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு வழங்கப்பட்ட உணவுகள் உள்ளூர் உணவுகளாகும். அயல் வீட்டவர்களினாலேயே திருமணத்திற்கான உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

திருமணத்திற்கு வருபவர்களுக்கு ரணவரா இலைகள் மற்றும் விளாம்பழம் கொண்டு தயாரிக்கப்பட்ட பானமே வழங்கப்பட்டுள்ளது.

மட்பாண்டங்களைக் கொண்டு இந்தத் திருமண உணவுகள் சமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *