மைத்திரிக்கு எதிராக சந்திரிக்கா ‘ஒப்பரேசன்’ ஆரம்பம்! தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாப்பதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவரான  சந்திரிக்கா அம்மையார் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கவுள்ளார் என தெரியவருகின்றது.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுதந்திரக்கட்சிக்குள் நுழைவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால்  தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக புதிய அலுவலகமொன்றை  சந்திரிக்கா அம்மையார் திறக்கவுள்ளார்.

இராஜகிரிய பகுதியில் அடுத்தவாரமளவில், சுதந்திரக்கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின் அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இத்தகவலை அமைப்பின் உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

”  சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும், கட்சியில் ஓரங்கப்பட்டப்பட உறுப்பினர்களுக்கு உரிய இடம் வழங்குவதுமே முதன்மை நோக்கம்.” என்று

சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு  தெரிவித்துள்ளது.

பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, ராஜபக்சக்களின் சிந்தனைகளுக்கு முதன்மையளிக்கும் வகையில் புதிய கட்சியை ராஜபக்ச குடும்பம் ஆரம்பித்துள்ளது.

இக்கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு சு.கவின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துவருகிறார்.

சந்திரிக்கா அம்மையாரின் ஆலோசனைகளையும் அவர் புறந்தள்ளிசெயற்படுகின்றார். இந்நிலையிலேயே மைத்திரிக்கு எதிரான ஆட்டத்தை சந்திரிக்கா ஆரம்பிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *