இந்து கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை!
வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு தேவையான தரங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும்
அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியன பூர்த்தி செய்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அதற்கான அனுமதியினை வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.