இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம்!
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது.
இந்தோனேசியாவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
டிசம்பர் மாத இறுதியில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேசியா கடும் பாதிப்புக்குள்ளானது.
சுமார் 400 பேர் சுனாமிக்கு பலியாகி இருந்தனர். இந்த பாதிப்புகளில் இருந்து முழுமையாக இன்னும் இந்தோனேசியா மீளாத நிலையில், மீண்டும் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.