இலங்கையைத் தோற்கடித்து வென்றது நியூசிலாந்து அணி!

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதன் அடிப்படையில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணி சார்பாக டிம் சௌத்தி அதிகூடிய ஓட்டங்களாக 68 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்நிலையில் தமது முதலாவது இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக மெத்தியூஸ் அதிகூடிய ஓட்டங்களாக 33 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

நியூசிலாந்து அணி சார்பாக டெரன்ட் பொள்ட் 6 விக்கெட்டுக்களையும் டிம் சௌத்தி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன் அடிப்படையில் தமது 2ஆவது இன்னிங்சைத் தொடர்ந்த நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 585 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பாக டொம் லதெம் 176 ஓட்டங்களையும் ஹென்றி நிகலஸ் ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

660 ஓட்டங்களைப் பெற்றால் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என்ற நிலையில் தனது 2ஆவது துடுப்பெடுத்தாடியது. ஆனால், நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக குசால் மெண்டிஸ் அதிகூடிய ஓட்டங்களாக 67 ஓட்டங்களைப் பெற்றார்.

நியூசிலாந்து அணி சார்பாக நெயில் வெக்னர் 4 விக்கெட்டுக்களையும் டெரன்ட் பௌல்ட் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனால் இப்போட்டியில் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *