போடைஸ் தோட்ட மக்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தால் நிவாரணம் !

ஹட்டன் – போடைஸ் 30 ஏக்கர் தோட்டக்குடியிருப்பில் நேற்று  காலை   ஏற்பட்ட தீ விபத்தால் நிர்க்கதியாகியுள்ள 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர்  தோட்ட வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம், பிரதேச செயலகம், பிரதேச சபை, நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் என பல தரப்புகளும் வழங்கிவருகின்றன.

இந்நிலையில், இன்று (30)  மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. உடுதுணிகள், பாய் மற்றும் உலர் உணவு பொருட்கள், பாடசாலை கற்றல் உபகரணங்கள் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *