பக்தி சொற்பொழிவுக்கு விபச்சாரிகளுக்கு அழைப்பு! ஆன்மீக வாதிக்கு வலுக்கிறது எதிர்ப்பு
உத்தரப்பிரதேசத்தில் நடக்கவுள்ள பக்தி சொற்பொழிவில் கலந்து கொள்ள விலை மாதர்களுக்கு அழைப்பு விடுத்த ஆன்மிகவாதிக்கு அயோத்தி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி வருபவர் மொராரி பாபு.

மொராரி பாபுவின் இந்த அழைப்புக்கு அயோத்தி மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில்,
புனிதமான அயோத்தி நகரில் விலை மாதர்களை அழைப்பதன் மூலம் மொராரி பாபு குழப்பம் விளைவிக்க முயல்கிறாரா? வேண்டுமானால், நக்சலைட்கள் மற்றும் விலை மாதர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று அவர் சொற்பொழிவு ஆற்றலாமே என கண்டனம் தெரிவித்தனர்.
உள்ளூர் இந்து அமைப்பின் தலைவரான பிரவீன் சர்மா, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு மொராரி பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.