ஆற்றில்மூழ்கி முஸ்லிம் இளைஞர்கள் இருவர் பலி- நாவலப்பிட்டியவில் சோகம்!

நாவலப்பிட்டி , இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று இன்று (22) உயிரிழந்தனர்.

அட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தையுடைய இருவர், தமது உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்தபோது-  மாப்பாகந்த ஆற்றில் நிராடச்சென்றவேளையிலேய இவ்வாறு பலியாகியுள்ளனர் என்றும்,

13 வயதுடைய அப்துள் ரஹ்மான் , 42 வயதுடைய மொகமட் முஸ்தாக் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸாரால்  மேலதிக விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

பத்தனை நிருபர்

க.கிசாந்தன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *