கிறிஸ்துமஸ் தாத்தா போல் சென்று குழந்தைகளை மகிழ்வித்த ஒபாமா
அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை, கிறிஸ்துமஸ் தாத்தா போல் சென்று நேரில் சந்தித்து முன்னாள் அதிபர் ஒபாமா அதிர்ச்சி அளித்தார்.

மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை கண்ட ஒபாமா அவர்களுக்கு பிடித்த உணவுப் பொருட்கள், பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார். ஒபாமாவை அரவணைத்த குழந்தைகள், நடப்பதை நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து போயினர்.