ஆட்டத்தை ஆரம்பித்தார் மங்கள!

எரிபொருள் விலைச் சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அமைச்சர் பதவியைஏற்ற பின்னர், ஜனாதிபதி செயலகத்தில்வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இடைக்கால கணக்கறிக்கை  நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, அமைச்சராக நியமிக்கப்பட்டகையோடு, அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *