‘உள்ளே கொதிப்பு- வெளியே சரிப்பு’ – 20 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய  முன்னணி அரசின் அமைச்சரவைக் கூட்டம் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் –  இடம்பெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் சுமார் 20 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டபின்னர் , ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள் குழுவாக படமெடுத்துக்கொள்வது வழமை. ஆனால், இம்முறை அவ்வாறு நடைபெறவில்லை என அறியமுடிகின்றது.

அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும்போது மட்டுமே புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *