வெள்ளி முதல் ‘சனி’வரை ‘அந்த 50 நாட்கள்’! அரசியல் களத்தில் நடந்தது என்ன? – விசேட தொகுப்பு

இலங்கை அரசியலில் முன்னெப்போதும் இல்லாதவகையில் அரசியல் நெருக்கடி தலைவிரித்தாடியது. நிறைவேற்று அதிகாரம் (ஜனாதிபதி), சட்டவாக்கம் (சபாநாயகர்) ஆகிய இருபெரும் துறைகளுக்கிடையிலான மோதலும் உச்சம் தொட்டது.

இதனால்,  நாட்டில் அரசியல் ஸ்தீரமற்றதன்தை உருவானது. பொருளாதாரம் தள்ளாடியதுடன், சுற்றுலாத்துறையும் வீழ்ச்சிகண்டது.  என்னசெய்வது ?  யாரின் கட்டளையை ஏற்பது? என புரியாமல் அரச அதிகாரிகள் தடுமாறினர். அரச மற்றும் நிர்வாக பொறிமுறைகள் முற்றாக செயல் இழக்கும் கட்டத்தை எட்டின. நாட்டு மக்களோ திண்டாடினர். அரசியல் ரீதியாக அவர்கள் அநாதைகளாக்கப்பட்டிருந்தனர்.

ஒக்டோர் 26 ஆம் திகதி ரணிலுக்கு ஆப்புவைத்துவிட்டு, மஹிந்தவை பிரதமராக நியமித்து குழப்பத்துக்கு பிள்ளையார் சுழிபோட்டார் ஜனாதிபதி மைத்திரி. அன்று முதல் நேற்று இரவுவரை பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் அரசியல் களத்தில் சம்பவங்கள் நடந்தேறின.  இன்றும் நடைபெற்றுவருகின்றன.  அவற்றின் தொகுப்பு வருமாறு –

ஒக்டோபர்

ஒக்டோபர் – 26 . ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக – புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிப்பு.

ஒக்டோபர் – 27. பிரதமர் பதவியை வகித்த ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறைப்பு. வாகனங்கள் பறிப்பு.

ஒக்டோபர் – 28. இலங்கையில் பிரதமருக்குரிய உத்தியோகப்பூர்வமான வாசஸ்தலமான அலரிமாளிகையில் இருந்து வெளியேற ரணில் மறுப்பு. தான்தான் சட்டப்பூர்வமான பிரதமர் என்றும் அதிரடி அறிவிப்பு.

ஒக்டோபர் – 29. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு. சூழ்ச்சி அரசென பிரதான கட்சிகள் நிராகரிப்பு. வெளிநாடுகளும் ஏற்கமறுப்பு.

ஒக்டோபர் – 30. நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதிக்கு, சபாநாயகர் கடிதம் அனுப்பிவைப்பு.

நவம்பர் மாதம்

நவம்பர் – 01 . நாடாளுமன்றத்தை 05 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என மஹிந்த அறிவிப்பு.

02 – நாடாளுமன்றத்தைக்கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு  மஹிந்த ராஜபக்சவுக்கு, பிரதான கட்சிகள் சவால் விடுப்பு.

04. நாடாளுமன்றம் 14 ஆம் திகதி கூட்டப்படும் என ஜனாதிபதி   அறிவிப்பு.

05. அரசியல் நெருக்கடி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியன கொழும்பில் முகாமிட்டு பேச்சு.

06. சிவில் அமைப்புகள் கொழும்பில் அணிதிரண்டு ஜனநாயகத்துக்காக  கோஷம்.

07 – 08 கட்சி தாவல்கள் அரங்கேற்றம். குதிரைப் பேரம் உச்சம்.

09.  நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவிப்பு விடுப்பு.

10. ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு மேற்குலக நாடுகள் கடும் கண்டனம். அரசமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும் வலியுறுத்து.

11. பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச உட்பட 52 பேர் சு.கவை கைவிட்டுச்சென்று, தாமரை மொட்டுடன் சங்கமம்.

12. ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் பங்காளிக்கட்சிகளுக்கிடையே விசேட கூட்டம்.

13. நாடாளுமன்றம் கலைப்பு இடைநிறுத்தம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

14. நாடாளுமன்றம் கூடியது. மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றம். சபைக்குள் பெரும் அமளி துமளி.

15. மஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்தார்.   இரண்டாவது நாளாகவும் நாடாளுமன்றத்தில் மோதல். நாடாளுமன்றத்தில் மஹிந்த விசேட  உரை. 

16. ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும் மோதல். மிளகாய்த்தூள் வீசி தாக்குதல்.

18. ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சிக்குழு கூட்டம். ஜே.வி.பி. புறக்கணிப்பு.

21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெளிநாட்டு இராஜதந்திரிகள் சந்திப்பு.

23. மஹிந்தவுக்கு எதிராக 122 எம்.பிக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்.

24. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் – ஜனாதிபதி மைத்திர் தொலைபேசி ஊடாக உரையாடல்.

 25.  நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான மனுக்களை விசாரிக்க 7 நீதியரசர்களைக்கொண்ட

குழாம் நியனம். 

29. மகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகத்துக்கான,  நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தம்,                 பிரேரணை  நாடாளுமன்றத்தில் 123 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றம்.

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க ஆதரவு. கூட்டமைப்பின் 14 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கூட்டாக கடி தம்.

டிசம்பர்

டிசம்பர் – 03 . பிரதமராக மகிந்த ராஜபக்சவும்,  அவரது அமைச்சர்களும், செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிப்பு.

04. சுதந்திரக்கட்சியின் விசேட மாநாடு . அரசியல் நெருக்கடிக்கு 7 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு.

07. சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம்.

12. ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றம்.

13. நாடாளுமன்றம் கலைப்பு சட்டவிரோதம் – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு

14.  மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை இரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு.

மைத்திரி, ரணில், கரு சந்திப்பு.

15. மஹிந்த இராஜினாமா.

தொகுப்பு எஸ். பிரதா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *