கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒருமணி நேரத்திற்கு 6 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் இளம் பெண்

லண்டனை சேர்ந்த பெண் ஒருவர், கட்டிப்பிடிக்க மட்டும் ஒரு நபருக்கு 6 ஆயிரத்திற்கு மேல் வசூலிப்பதாக தெரிவித்துள்ளார்.

லண்டனை சேர்ந்த கட்டுமான பணியாளர் ராஸ்டி (40) என்பவரின் மனைவி 35 வயதான பெட்ரா சாஜ்பான். இவர் ஒருமணி நேரம் கட்டிப்பிடிக்க £70 பவுண்ட்ஸ் வரை வசூலித்து வருகிறார். மேலும், தான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட திறமை வாய்ந்த கட்டிப்பிடி நிபுணர் எனவும், தனக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் தேவை என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கூறியுள்ள சாஜ்பான், 2015-ன் ஆரம்பத்தில் தான் கட்டிப்பிடிப்பதற்கு எத்தகைய சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்தேன். எனக்கு பிடித்த நோயாளிகளில், நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் பல வருடங்களாக வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒருமுறை நான் கட்டிபிடிக்கவா என கேட்டேன். அதற்கு அவர் சிறிது யோசித்துவிட்டு, மெதுவாக தலையை ஆட்டினார். மறுநாளும், அவர் என்னை பார்த்த உடன் மீண்டும் கட்டிபிடிக்கவா என கேட்டேன் அவரும் வேகமாக தலையை ஆட்டினார்.
இது தினமும் தொடரும்போது அவருடைய உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது. 2016-ல் கட்டிப்பிடி வைத்தியம் பற்றிய ஒரு கட்டுரையை படித்தேன். அப்பொழுது தான் அதை ஒரு நல்ல வகையில் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன். அதற்கு என்னுடைய கணவரும் முழு அனுமதி கொடுத்தார். ஒரு மணிநேரமாக கட்டிப்பிடிக்க 70 பவுண்ட்ஸ் என வசூலிக்க ஆரம்பித்தேன். இதில் எந்த பாலியல் உறவும் கிடையாது. இதன் மூலம், அதிக மனஉளைச்சலில் இருப்பவர்களுக்கு ஒரு மனஅமைதி கிடைக்கிறது. முடி உதிர்தல், பேசும் திறமை உள்ளிட்டவை வளர்ச்சியடைகிறது.
ஜூன் மாதம் 2016-ம் ஆண்டு £150 பவுண்ட்ஸ் செலுத்தி ஒரு இணையதளத்தை துவங்கினேன். அதன் மூலம் உலகில் உள்ள பலரும் என்னை அணுக ஆரம்பித்தார்கள், அதில் முதலாவதாக 30 வயதுடைய ஒரு ஆண் தன்னுடைய நிறுவன வேலைப்பளுவால் ஏற்படும் மனஅழுத்தம் பற்றி கூறினார். நானும் கட்டிப்பிடி வைத்தியம் பற்றி முழுமையாக விளக்கி கூறிய பின், அவரை சந்திக்க ஓட்டலுக்கு சென்றேன். ஆரம்பத்தில் எனக்கு பதட்டமாக இருந்தது. ஒரு மணிநேரம் கட்டிபிடித்தபடியே படுக்கையில் இருந்தோம். அதன் பிறகு அந்த நபர் தன்னுடைய மனஅழுத்தம் அனைத்தும் சரியாகிவிட்டதாகவும், இதற்கு முன் இப்படி ஒன்றினை அறிந்ததில்லை எனவும் கூறினார் என தன்னுடைய வேலை பற்றி சாஜ்பான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *