கிழியக் கூடாத இடத்தில் கிழிந்த ஆடை – சங்கடத்தில் நெளிந்த நடிகை!

நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த டிவி நடிகை கிம் கர்தாஷியனின் உடை கிழிந்து சங்கடமாகிவிட்டது.

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலும், தொழில் அதிபருமான கிம் கர்தாஷியன் பிராட்வேயில் நடந்த ஷேர் ஷோவுக்கு தனது கணவர் கென்யே வெஸ்டுடன் வந்தார். கிம் வெர்சாச்சி பேக்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.

கிம் தனது கணவருடன் சேர்ந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்தார். அப்பொழுது அவரது கவுன் ஒரு பக்கம் கிழிந்து அவரின் முன்னழகை அளவுக்கு அதிகமாகவே காட்டிவிட்டது. உடனே கிம் அதை சரி செய்தாலும் அந்த சங்கடமான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிவிட்டன.

பொது நிகழ்ச்சியில் தனக்கு இப்படி ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டபோதிலும் கிம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக ஆடை கிழிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு காமெடியாக கமெண்ட் போட்டுள்ளார் கிம்.

கிம் அணிந்து வந்த கவுனை மாடல் நவோமி கேம்பெல் தான் முதலில் அணிந்து ராம்ப் வாக் செய்தார். அதன் பிறகு நவோமி அதே கவுனை 2015ம் ஆண்டு நடந்த விருது விழாவுக்கும் அணிந்து வந்தார். அதே மாடல் கவுனை பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸும் ஃபேஷன் விருது விழாவுக்கு அணிந்தார்.

கிம் கர்தாஷியனுக்கு கவுன் கிழிய அவரின் கணவர் கென்யே வெஸ்டோ நிகழ்ச்சி நடந்தபோது செல்போனை நோண்ட அது பிரச்சனையாகிவிட்டது. அதன் பிறகு ஒரு வழியாக கணவருக்காக பயங்கரமான விளக்கம் அளித்து சமாளித்தார் கிம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *