O/L பரீட்சை நாளை ஆரம்பம்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (03) திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக நிலையப் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் 8 மணிக்கும் முன்னர் பரீட்சை நிலையங்களுக்கும் பரீட்சார்த்திகள் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை விசேட தேவையுடையோர் வித்தியாலயம் மற்றும் தங்கல்ல மாத்தறை சிலாபம் கொழும்பு மகசின் சிறைச்சாலை போன்றவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போராதனை போதனா வைத்தியசாலை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றவற்றிலும் பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சை நடவடிக்கைகளுக்காக 47 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 4 ஆயிரத்து 561 பரீட்சை நிலையங்களும், 541 பரீட்சை இணைப்பு நிலையங்களும் நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *