‘ஜனாதிபதி தாத்தா’ வால் சபையில் ‘ஆபாச’ சர்ச்சை…! அப்படி என்னதான் நடந்தது?

மேல்மாகாணசபை அமர்வில் முதல்வர்  ‘பட்ஜட்’ உரை நிகழ்த்துகையில் உறுப்பினர்கள் சிலர் ஆபாச படம் (புளுபிலிம்) பார்த்து மகிழ்ந்த ‘அசிங்க’ சம்பவமானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சமூகவலைத்தளங்களிலும் – பொதுவெளியிலும் இது தொடர்பில் பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் அதிஉயர் சபையான நாடாளுமன்றத்தில்  ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான துசார இந்துனில் , ஆபாச புத்தகமொன்றை வாசிக்கிறார் என  சக எம்.பியொருவரே (முஜிபூர் ரஹ்மான்) – சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் முறையிட்டார்.

இதனால்  அவைக்குள் இருந்த எம்.பிக்களினதும், கலரியிலிருந்த ஊடகவியலாளர்களினது பார்வையும் முஜிபூரை  நோக்கியே திரும்பியது.

அட…சபைக்குள் இப்படியும் நடக்கிறதா என யோசித்து முடிப்பதற்குள் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார் துசார இந்துனில் எம்.பி.ஜனாதிபதியின் மகளான சத்துரிக்கா சிறிசேனவால் எழுதப்பட்ட ‘ஜனாதிபதி தாத்தா’ என்ற நூலே , அவரின் கையில் இருந்தது.

இது குறித்து விளக்கமளித்த அவர்,

“ சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, இது குறித்து நான் விளக்கமளிக்காவிட்டால்,நாட்டுக்கும், வாக்களித்த மக்களுக்கும் தவறான கருத்தொன்று சென்றுவிடும். நான் ஆபாச புத்தகம் வாசிக்கவில்லை. சத்துரிகா சிறிசேனவால் எழுதப்பட்ட ‘ஜனாதிபதி தாத்தா’ என்ற புத்தகத்தையே வாசிக்கின்றேன்.

தந்தையின் பெயர் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது என எனது என்பர் ஒருவர் குறிப்பிட்டார். அதைதான் பார்க்கின்றேன்’’ என்றார். இதனால், சபையில் பெரும் சரிப்பொலி ஏற்பட்டது.

அதேவேளை, ஐ.தே.கவின் எம்.பியான ஆசுமாரசி ங்க, விஜேபால எட்டியாராச்சி உள்ளிட்டவர்களும் குறித்த புத்தகத்துடன் தற்போதைய அரசியல் சூழ்நிலையை தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *