மொபிடல் கூகுள் உடன் இணைந்து பெண் சில்லறை வணிகர்களுக்கு பெறுமதிமிக்க ‘WomenWill’ பயிற்சிபட்டறை

இணைக்கப்ட்ட பெண்கள் முனனெடுப்பு GSMA இன் உறுதியான அங்கத்தவராக மொபிடல் அண்மையில் கொழும்பில் கூகுள் பிஸ்னஸ் குரூப் உடன் அதன் பெண்கள் பகுதி சில்லறை வணிக வலையமைப்பிற்கு ‘WomenWill’  செயற்திட்டத்தினை அறிமுகப்படுத்த பங்காளராக கைக்கோர்த்து உள்ளது.

ஓர் முழுநாள் செயலமர்வு மொபிடல் இன்னவேஷன் சென்டரில் நடைபெற்றது.’Womenwill’ ஆனது கூகுளினால் ஆரம்பிக்கப்பட்ட ஓர் முயற்சியாகும் .இது பெண்களுக்கு சகல இடங்களிலும் வாய்ப்புக்களை உருவாக்குவதன் ஊடாக அவர்கள் வளர்ச்சி அடைந்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.

இணைக்கப்பட்ட பெண்கள் முயற்சியின் உறுதியான அங்கத்தவராக மொபிடல் இ இலங்கையின் பெண்களுக்கு டிஜிட்டல் வளர்ச்சியினை வேகப்படுத்தல் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு நடாத்தவும் அவர்களுக்கு ஆதரவு வழங்க பல்வேறு செயற்திட்டங்களையும் செயற்படுத்துகின்றது.

இந்துலேகா நாணயக்கார –முன்னணி WomenWill  இலங்கை மற்றும் இணை முகாமையாளர் -GBG சஜினி ஜெயவர்தன கூகுள் பிஸ்னஸ் கொமியுனிட்டி மற்றும் தனுஷிக்கி பெரேரா -இணை முகாமையாளர் மற்றும் பயற்சியாளர் புடீபு கொழும்பு ஆகியோரால் நுண்ணறிவுசார் பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.

பயிற்சிப்பட்டறையானது டிஜிட்டல் தலைமைத்துவம் மற்றும் முயற்சியாண்மை திறன்கள் வேலைப்பளு – வாழ்க்கை என்பவற்றை சமப்படுத்தல் இபெண்கள் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டினை அதிகரிக்க உதவுதல் இகவர்ந்திழுத்தல் மற்றும் இணைந்திருத்தல் ஊடாக அவர்களின் வியாபாரத்தினை மேம்படுத்தல் என்பவற்றை நோக்காக கொண்டு நடாத்தப்பட்டது.

பயிற்சிபட்டறையானது யிpள உடன் கைகளிலான அனுபவம் கலந்துரையாடல் மற்றும் ஐஸ் பிரேக்கர் பகுதிகள் போன்ற குழு செயற்பாடுகளை உள்ளடக்கி இருந்தது .பயிற்சிபட்டறையின் முடிவாக பங்குபற்றிய சகலருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பங்குபற்றியவர்கள் வழங்கிய பின்னூட்டங்கள் மிகவும் நேர்மறையாகவே இருந்தன. பட்டறையானது உண்மையாகவே அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழிற்துறை வாழ்வாதாரங்களை மே;மபடுத்துவதாக அமைந்தமையினால் அவர்களுக்கு அது பெறுமதி வாய்ந்ததாக இருந்தது. இப் பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நடந்தமையினால் எதிர்வரும் மாதங்களில் இதுபோன்ற செயற்திட்டங்களை வெவ்வேறு மாவட்டங்களில் நடாத்த மொபிடல் திட்டமிட்டுள்ளது.

மொபிடல் ஆனது இம் முயற்சியில் இணைந்துக் கொண்டமைக்கான காரணம் ஓர் பயிற்றப்பட்ட பெண் சில்லறை விற்பனையாளரை உருவாக்குவது மொபிடலுக்கு பயன்தக்க வகையில் மொபிடலின் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக கற்பிக்கக் கூடிய புதிய பெண் வாடிக்கையாளர்களை இனங் காணக் கூடியவாறு இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தமையினால் ஆகும். தேசிய தொலைத்தொடர்பு வழங்குநர் தனது பெண் வாடிக்கையாளர் இடையே மொபைல் பண பொருள் பயன்பாட்டினையும் மொபைல் இன்டநெட் ஊடுருவலை அதிகரிக்கவும் வழிகோலும் என நம்புகிறது. இலங்கைப் பெண்களுக்கு டிஜிட்டல் விரைவுப்படுத்தல் மற்றும் நிதி உட்படுத்தல் என்பனவே மொபிடலின் முக்கிய இலக்காக உள்ளது. இவ்விலக்கின் ஓர் பகுதியாக இலங்கையை தகவல் தொடர்பு மற்றும் அறிவு நிறைந்த சமுதாயத்திற்கு வழிநடத்தல் ஆகும்.

தேசிய தொலைத்தொடர்பு வழங்குநராக மொபிடல் முயற்சியாளர்களின் முன்னெடுப்புக்களுக்கு கைகொடுக்கவும் ஆரோக்கியம் இநிதிஇ கல்வி இ தொழில் முயற்சியாளர்கள் இடையிலான பாலின இடைவெளிகளை இணைப்பதற்கு சக்தியளித்தல் போன்ற வாழ்வாதார மேம்படுத்தல் மொபைல் சேவை நிகழ்ச்சி களையும் மேற்கொள்கிறது. மொபிடல் பெண்களிற்காக முதலீடு செய்தல் என்பது குடும்பங்கள் சமூகங்கள் மற்றும் நாட்டில் முதலீடு செய்தல் ஆகும். பெண்களின் வளர்ச்சியில் முதலீடு செய்தல் என்பது அவர்களின் தரத்தினை உயர்த்துவதோடு அவர்களுக்கு சக்தியளித்தல் என்பது பொருளாதா ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகவும் பயன்தகு வளர்ச்சிக்கான முதலீடாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *