AIA வெல்த் பிளேனர்களின் டோக்கியோ, ஜப்பானிற்கான சுற்றுப்பயணம்!

AIA இன்ஷூரன்ஸின் 216 மிகச்சிறந்த வெல்த் பிளேனர்கள் கடந்த வருடம் நிறுவனத்திற்கு வழங்கிய பாராட்டத்தக்க அதிசிறந்த செயல்திறனின் கௌரவத்திற்காக தங்களது வாழ்க்கைத் துணைகள், மற்றும் பிள்ளைகளுடன் ஜப்பானிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

2017 இற்கான AIA யின் சுப்ரீம் கிளப் வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கே செர்ரி மலர்கள் பூத்துக் குழுங்கும் ஜப்பானினுடைய தலைநகரமான டோக்கியோவுக்கு அற்புதமான ஒருவாரச் சுற்றுப்பயணப் பொதியொன்று பரிசளிக்கப்பட்டிருந்தது.

அவர்கள் அங்கே மிகவும் பிரபலமான இடங்களான பூஜி மலை 5வது நிலையம், ஒடைபா ஒன்சென் வெந்நீரூற்றுக் குளியல் மற்றும் ஸ்பா, ஒடைபா வானவில் பாலம், டிஸ்னிலேண்ட், அசாகுஸா கோவில், இம்;பீரியல் அரண்மனைத் தோட்டம் உட்பட மேலும் பல இடங்களைப் பார்வையிட்டதுடன், சிலிர்ப்பூட்டும் சின்கான்சென் (தோட்டா தொடருந்து) அனுபவத்தையும் மிகவும் ரசித்து மகிழ்ந்திருந்தனர்.

AIA விற்பனை அணிக்காகத் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்ற வெகுமதித் திட்டத்திற்கான மற்றுமொரு உதாரணமாகவே இந்த உற்சாகமான சுற்றுப்பயணம் அமைந்திருந்ததுடன், மேலும் இவ்வெகுமதித் திட்டமானது வெல்த் பிளேனர்களின் செயல்திறனிற்கு மதிப்பளித்து உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கான சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு வழங்குகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *