ரஜினியின் 2.0 வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
சர்கார் படத்தை வெளியிட்டது போல் ரஜினிகாந்தின் 2.0 படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் ‘தீபாவளியன்று வெளியாகும் ‘சர்கார்’ படத்தை எச்.டி. பிரிண்டில் அன்றைய தினமே வெளியிடுவோம்’ என தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவு கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெளிப்படையான சவால் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது.