உலகில் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்திய சீனா

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ செய்தி வாசிப்பாளரை சீன செய்தி நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவின் வூஜென் நகரில் நடைபெற்று வரும் 5 வது உலக இணைய மாநாட்டில் இந்த இயந்திர செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
உண்மையான செய்தி வாசிப்பாளரைப் போன்றே குரல் மற்றும் முகபாவங்களைக் கொண்ட இயந்திய செய்தி வாசிப்பாளரை சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்குவா, சீன தேடு பொறி நிறுவனமான sogou.com உடன் இணைந்து வடிவமைத்துள்ளது.
இதன் மூலம் சமூக ஊடகத் தளங்களில் 24 மணிநேரமும் வேலை செய்ய முடியும் என சின்குவா தெரிவித்துள்ளது. மேலும், பேசும் ரோபோக்கள், ஓட்டுனர் இல்லா பேருந்து, முகபாவனைகளை படம் பிடித்து சேமிக்கும் டிஜிட்டல் திரை ஆகியவையும் இந்த இணைய மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *