மூடிகளற்ற வடிகான்; மூடப்படாமையால் மக்கள் அவதி!
மூடிகளற்ற வடிகான்; மூடப்படாமையால் மக்கள் அவதி!
அட்டாளைச்சேனை மக்கள் விசனம்
அட்டாளைச்சேனை -07 (றகுமானியாபாத்) மத்திய வீதி பழைய பாடசாலை வீதி, பழீல் வீதி, அலாவுதீன் பக்கர் வீதி என்றழைக்கப்படும் வீதிகளில் அமையப் பெற்றுள்ள வடிகான்களில் சுமார் மூன்று நான்கு வருடகாலமாக மூடிகள் இடப்படாத நிலையில் காணப்படுகின்றது.
இதனால் அப்பிரதேசத்தில் வாழ்கின்ற சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பல இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பழீல் வீதி, அலாவுதீன் பக்கர் வீதி மற்றும் கோணாவத்தை வீதி சந்திக்கின்ற சந்தியில் ஒரே ஒரு மூடியுடன் தான் வடிகான் அமைந்துள்ளது.ஒழுங்காக ஒரு முச்சக்கர வண்டி கூட செல்ல முடியாத அவல நிலை காணப்படுகிறது. இதனைக் கருத்திற் கொண்டு உரிய அதிகாரியின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று சிறுவர்களின் பாதுகாப்புக் கருதி இதற்கு முறையான மூடியை இட்டுத் தருமாறு அப்பிரதேச வாழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.