மைத்திரியை கைவிட்டுச்சென்ற சுசிலுக்கு நீதி அமைச்சு – இன்றும் அமைச்சர்கள் பதவியேற்பு!

புதிய அரசில் மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று முற்பகல் பதவியேற்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில், நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

சுசில் பிரேம ஜெயந்த  – பொது நிர்வாக, உள்நாட்டு விவகாரங்கள், மற்றும் நீதி அமைச்சர்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிவந்த சுசில் பிரேமஜயந்த, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டவேளை,மைத்திரியை கைவிட்டு மஹிந்த ப க்கம் தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துல குணவர்த்தன – அனைத்துலக வணிகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள்

எஸ்.எம்.சந்திரசேன            – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

லக்ஷ்மன் வசந்த பெரேரா  – அனைத்துலக வணிகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

சி.பி.ரத்நாயக்க                      – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

சாலிந்த திசநாயக்க               – சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்

அனுர பிரியதர்சன யாப்பா  – நிதி இராஜாங்க அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *