AIA இன்ஷூரன்ஸ் நாடு முழுவதும் ‘மகிழ்ச்சியான குழந்தை வளர்ப்பை’ ஊக்குவிக்கின்றது!
ஒவ்வொரு பெற்றோரினதும் பிரதான நோக்கமாக இருப்பதென்பது தங்களது பிள்ளைகளை மகிழ்ச்சியானவர்களாகவும், வெற்றிகரமானவர்களாகவும் வளர்த்தெடுப்பதாகும்.
எனினும் இந்நோக்கத்தை மிகவும் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு சில நேரங்களில் சில சிறிய ஆலோசனைகளும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன.
பெற்றோர்கள் அவர்களுடைய ‘குழந்தைகளை சரியாக வளர்த்தெடுப்பதை’ உறுதிப்படுத்துவதற்கென்றே தங்களை அர்ப்பணித்துள்ளனர். எனினும் இதை செயன்முறைப்படுத்தும் போது சில நேரங்களில் அவர்கள் அழுத்தத்திற்கும், மற்றும் சவாலுக்கும் உள்ளாகின்றனர்.
‘மகிழ்ச்சிகரமான குழந்தை வளர்ப்பு’ என்பது பெற்றோர்கள், மற்றும் குழந்தைகள் இருவரும் திருப்தியடைந்து மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்துகின்ற, குழந்தை வளர்ப்பின் மிகவும் முக்கியமானதொரு பகுதியாகும்,
நாம் நினைவில் நிறுத்த வேண்டிய மற்றுமொரு மிகவும் முக்கியமொனதொரு விடயமாக இருப்பது தலைமுறை ஏற்றத்தாழ்வாகும். பெற்றோர்கள், இன்றைய உலகில் இடம்பெறுகின்ற, மற்றும் தங்களது பிள்ளைகளின் வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்துகின்ற மாற்றங்களையும், வளர்ச்சியினையும் புரிந்து கொண்டு அதற்கேற்பவே பயணிக்க வேண்டும்.
இன்றைய நவீன தொழில்நுட்ப, மற்றும் டிஜிடல் சமூகத்தில் சிறந்த பெற்றோராக இருப்பதென்றால் என்ன என்பதை அவர்கள் எதிர்நோக்க வேண்டியதோடு, அதற்கேற்பத் தங்களைத் தயார்செய்து, கற்றல் செயற்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும்.
இதனாலேயே AIA இன்ஷூரன்ஸ், பெற்றோர்கள் உலக மாற்றங்களை அறிந்து வைத்திருப்பதற்கு உதவுகின்ற அதேவேளை, நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களுக்கு கல்வியூட்டுவதையும், மற்றும் ஆலோசனை வழங்குவதையும் நோக்காகக் கொண்டு நாடு முழுவதும் கருத்தரங்குகளின் தொடர் ஒன்றையும் நடாத்தி வருகின்றது. யுஐயு யினால் முன்னெடுக்கப்படும் இந்ந நாடளாவியச் செயற்பாடானது, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய இரு சாராரின் நலனிலும், மற்றும் குழந்தை வளர்ப்பின் உடல், உள அம்சங்களைக் கருத்திற் கொண்டும், பெற்றோர்களுக்கான ஆலோசனை, மற்றும் தொழில் ரீதியான நிபுணத்துவத்தை வழங்குவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள பெற்றோர்கள் தங்களின் சவால்களை அடையாளம் காண்பதுடன், அவர்களுடைய குடும்பம் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான, சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுவதற்கான ஆதரவொன்றைத் தேடுவதாகவே AIA யினுடைய ஆய்வு மற்றும் உள்ளார்ந்த புரிதல் குறிப்பிடுகின்றது.
பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள், இருவரும், பங்குபற்றுகின்ற இத்தனித்துவமான திட்டமானது, அவர்களுடைய குடும்பத்திற்குப் பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான, நிதியியல் ஆரோக்கியம், மற்றும் உறுதித் தன்மையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றது.
தொழில் ரீதியான ஆலோசனையுடன், குழந்தை வளர்ப்புப் பற்றிய ஆய்வை ஒருங்கிணைக்கும் போது, பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைகளுடன் உறுதியான பிணைப்பொன்றைக் கட்டியெழுப்பி, பிள்ளைகளைச் சரியாகப் புரிந்துகொள்வதுடன், நெகிழ்திறனான பிள்ளைகளை வளர்த்தல், மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கட்டியெழுப்பலுக்கான தீர்வையும் பங்கேற்பாளர்களான பெற்றோர்கள் கண்டறிந்து கொள்கின்றனர்.
இவ்வாறான கருத்தரங்கு ஒன்றில் நீங்களும் பங்கேற்க விரும்பினால் தயவுசெய்து 0112 310310 இற்கு அழையுங்கள்.