தமிழரசுக் கட்சியை வழிநடத்த இளைஞர்கள் முன்வரவேண்டும்! – கட்சியின் தலைவர் மாவை கோரிக்கை

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இளைஞர்கள், யுவதிகள் பெருமளவாக இணைந்து, அதன் பல்வேறு பொறுப்புக்களிலும் பங்குகொண்டு அதனை வழிநடத்த முன்வரவேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ. சேனாதிராஜா.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் – மகளிர் மாநாட்டில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிகளை இளைஞர்கள் அலங்கரிக்கவேண்டும். அதற்காகத் தற்போதே எமது கட்சியில் இணைந்து அதன் பல்வேறு படிநிலைகள் ஊடாக அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தயாராக உள்ளேன்.

கடந்த முறை வடக்கு மாகாண அரசுக்குக் கல்வியியலாளர்கள், சட்டவாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் என்று மிகவும் உயர்ந்த ஒரு கல்விச் சமுகத்தவர்களையே தேர்தலில் நாம் நிறுத்தி பெரு வெற்றி பெற வைத்தோம். இவ்வாறான ஒரு நல்ல அறிவுடை சமூகத்தைக் கொண்டு மாகாண சபையை சிறப்பாக வழிநடத்த முடியாமல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் போட்டுடைத்துள்ளார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *