எம்.பிக்களின் தலைகளுக்கு கொட்டுகின்றன கோடிகள்! – ஹக்கீம் தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போடுவதற்காக மஹிந்த தரப்பிலிருந்து குதிரைப்பேரம் பேசப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஜனாதிபதி தரப்பு நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து ஆட்களைத் திரட்டி தலைநகரில் தன் பலத்தைக் காண்பிக்க முயற்சிக்கின்றது. ஆனால், நாடாளுமன்றத்தைக் கூட்டி – பெரும்பான்மை பலத்தைக் காண்பிக்கத் தயங்குகிறது. இது கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தைக்கூட்ட ஜனாதிபதி ஒப்புக்கொண்டுவிட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். ஆனால், இதுவரை அது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த இழுபறியின் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைகளுக்கு விலைபேசும் நிலை உருவாகியிருக்கின்றது” என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *