அரசியல் நெருக்கடி – சட்டமா அதிபரும் கைவிரிப்பு!

பிரதமர் பதவியில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் ஆட்சி மாற்றம் என்பன குறித்து கருத்து கூறமுடியாது என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய கைவிரித்துள்ளார்.


“ பிரதமர் பதவி, அரசில் ஏற்பட்ட மாற்றத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் அரசியலமைப்பின் கீழ் சட்டமா அதிபரின் வரையறைக்கமைய கருத்து வெளியிடுவது சிறந்தது அல்லவென” குறிப்பிட்டு சபாநாயகருக்கு கடிதமும் அனுப்பிவைத்துள்ளார்.

பிரதமர் பதவிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு , அப்பதவிக்கு மஹிந்த ராஜபக்சவை நியமித்தமை அரசமைப்புக்கு முரணானச்செயல் என்று ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டிவருகின்றது.

இந்நிலையில், இதுவிடயத்தில் சட்ட ரீதியான விளக்கத்தை அல்லது பொருட்கோடலை சட்டமா அதிபரிடம் கடந்த 27 ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய கோரிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *