மஹிந்த பிரதமரானதால் தொண்டாவுக்கு கொண்டாட்டம் – அட்டனில் பட்டாசுகொளுத்தி ஆராவாரம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து மஹிந்தவின் ஆதரவாளர்கள் அதை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் அட்டனிலும் பட்டாசுகொளுத்தி பெரும் ஆராவாரம் செய்யப்பட்டுள்ளது.

அட்டன் நகருக்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு நகரவாசிகள், பெரும் வரவேற்பளித்தனர்.

புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள். வழமைக்கு மாறாக அட்டனில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் இணை தலைவருமான டாக்டர். கிர்ஷான் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி 28.10.2018 அன்று அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சுபீட்சமாக இடம்பெற வேண்டும் எனவும், மஹிந்த மற்றும் மைத்திரியின் இந்த புதிய அரசாங்கம் பல அபிவிருத்திகளை கண்டு புதிய பயணத்தை நோக்கி முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

க.கிசாந்தன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *