ரணிலுக்கு எதிரான ‘மைத்திரி ஒபரேஷன்’ ஓயவில்லை – பாதுகாப்பை அகற்றுமாறும் பணிப்பு!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களை அகற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இத்தகவலை ஐ.தே.கவின் மூத்த உறுப்பினரான மங்கள சமரவீர எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அகற்றப்படும் பாதுகாப்பு மற்றும் வாகனங்களை போலியாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜக்சவுக்கு வழங்கப்படவுள்ளது என்றும், இது வெட்கக்கேடான செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவி வகிக்கும் ஒருவருக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்படும். பாதுகாப்பு வாகனத்தொடரணி, விசேட அதிரடிப்படையினர் என பல அம்சங்கள் அதில் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் தான் இன்னும் சட்டரீதியான பிரதமர் என ரணில் அறிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *