15 வயதிலேயே அந்த கொடுமை.. குமுறும் நடிகை நிக்கி கல்ராணி தங்கை சஞ்சனா!

நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனாவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

திரைப் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை மீடூ மூவ்மெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் நடிகை சஞ்சனா கல்ராணியும் இணைந்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளவர் நிக்கி கல்ராணி. அவருடைய தங்கை சஞ்சனா கல்ராணி கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.

சஞ்சனா கல்ராணி 15 வயதில் ‘கண்ட ஹெண்டதி’ படத்தில் அறிமுகமானபோது அப்படத்தின் இயக்குனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என பல கனவுகளோடு வந்தேன், அப்போது இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா மல்லிகா ஷெராவத் நடித்த மர்டர் திரைப்படத்தை காண்பித்து அதை ரீமேக் செய்யப்போவதாக சொன்னார்.

முத்தக்காட்சி அந்த படத்தில் கிளாமர் காட்சிகள் இருந்ததால் நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், தென் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றதுபோல் படம் எடுக்கப் போவதாகவும், ஒரே ஒரு முத்தக்காட்சி மட்டுமே இருக்குமென்றும் கூறினார். அதனால் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்புக்காக பாங்காக் சென்றபோது, படப்பிடிப்பு தளத்தில் என் அம்மாவை இயக்குனர் அனுமதிக்கவில்லை.

மிரட்டல் என்னை பலமுறை முத்தக்காட்சியில் நடிக்க வைத்து படமாக்கினார். ஒத்துக்கொள்ள முடியாது என நான் சொன்னதற்கு என்னுடைய திரைவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன். சொல்வதை செய் என மிரட்டி நடிக்க வைத்தார். என்னுடைய மார்பகத்தையும், கால்கலையும் அசிங்கமான முறையில் காட்சிப்படுத்தினர். ஆயிரம் கனவுகளோடு வந்த என்னை அவர்கள் தவறாக பயன்படுத்தினர். எனக் கூறியிருந்தார்.

உண்மை இந்த விஷயத்தை இயக்குனர் ஸ்ரீவத்சா மறுத்துள்ளாரே எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு “எந்த திருடராவது தன்னை திருடர் என ஒப்புக்கொண்டது உண்டா? நான் பல இயக்குனர்களோடு பணிபுரிந்துள்ளேன். யார் மீதும் குற்றசாட்டு வைக்கவில்லை. இவர் தவறானவர் என்பதால்தான் சொல்கிறேன் என பதிலளித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *