சக்கைபோடுபோடும் ‘சதை’!

‘சதை’ குறுந்திரைப்பட வெளியீட்டுவிழா கடந்த 24 ஆம் திகதி ஹட்டனில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.


அகணிகம் குழுவினரின் முயற்சியால் உதயமான இக்குறுந்திரைப்படமானது சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பள்ளிபருவத்தில் வரும் தவறான காதல் உறவால் சிலவேளைகளில் வாழ்வே தொலைந்துவிடுகின்றது. இதை மையப்படுத்திதான் கதையோட்டம் அமைந்துள்ளது.

காதல் என்பது தவறில்லை. ஆனால், அந்த காதலை காம ஆயுதமாகப் பயன்படுத்துவது தவறு – ஆபத்தானது என்பதை விழிப்புணர்வாக எடுத்துரைத்துள்ளார் இயக்குனர் யுவன்.உதவி இயக்குனர் கமேஸின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.

பாடல், காட்சியமைப்பு, வீடியோ என அனைத்து வழிகளிலும் அசத்தியுள்ளனர் அகணிகம் குழுவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *