மட்டக்களப்பு விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்வது அவசியம்! ரணில் – மோடி பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் நஸீர்!!

“சர்வதேச தரத்துக்கு மட்டக்களப்பு விமான நிலையத்தை தரம் உயர்த்த வேண்டுமென நான் கிழக்கு மாகாண முதலமைச்சாராக இருந்துபோது இந்திய அரசியிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். இதற்காக பல சுற்று பேச்சுகளை அங்கு சென்று நடத்தியிருக்கிறேன். இந்த விமான நிலையம் தர உயர்த்தப்பட்டு முதன் முதலாக இந்திய விமானங்கள் தரை இறங்கவேண்டும் எனவும் கோரியிருந்தேன். இந்நிலையில் தற்போது இலங்கை பிரதமருக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுகளின் பிரகாரம் இவ்விடயம் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த விமான நிலையம் தரமுயர்த்தப்படுவதன் மூலமாக இந்தியாவுடான நட்பு கிழக்கு மக்களுக்குடன் மேம்படுவது மட்டுமின்றி, வர்த்தக உறவுக ளும்; அதனூடான பொருளாதார முன்னேற்றங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அமையும். இந்தியாவுடான வர்த்தக உறவுகளை கிழக்கு வாழ்மக்கள் நீண்ட காலமாக கடைக்கொண்டுள்ளனர். எனினும் போக்குவரத்து இடர்பாடு கள் இதில் தேக்கநிலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், விமான பயணங்கள் இலகுவானதாக மாற்றப்படுமாயின் வர்த்தக உறவுகள் விரிவடையும் நிலைமை ஏற்படும். இது தற்போதைய இலங்கையின் பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்பட வழி வகுக்கும். எனவே, இவ்விடயத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்திய அதிகாரிகள் வழங்கியுள்ள உத்தரவாதங்களை உடன் நடை முறைப்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து நமது பிரதமர் கூடிய கவனம் செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *