நடிகை கஸ்தூரிக்குப் பாலியல் தொல்லை: செருப்பால் அடிவாங்கியவர்களில் ஒருவர் மரணம்!
மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் ‘‘உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறியிருந்தீர்களே. அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை? தயக்கமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள கஸ்தூரி, ‘‘தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்னிடம் செருப்படி வாங்கிக்கொண்டு இன்றுவரை பொது இடத்தில் என்னைப் பார்க்கும் போதெல்லாம் எதுவுமே நடக்காத மாதிரி மழுப்புகின்றனர் சிலர். அவர்களில் ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவருக்கு உயிர் இழுத்துக் கொண்டிருக்கின்றது. இவர்களைப் பற்றி இப்போது பேசுவதற்கு எனக்கே பாவமாக இருக்கின்றது’’ என்று கூறியுள்ளார்.