18 பேரை காவுகொண்ட தாய்வானின் பாரிய ரயில் விபத்து

18 பேரை காவுகொண்ட தாய்வானின் பாரிய ரயில் விபத்து

தாய்வானின் யிலன் கவுண்டியில், பயணிகள் ரயிலொன்று தடம் புரண்டு பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றிருந்ததுடன், விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளதுடன், 148 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அறியப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து தாய்வானின் ரயில்வே நிர்வாகத்தின் துணைத் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

”தடம் புரண்ட ரயில் ஆறு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது என்றும், அது நல்ல நிலையிலே இருந்தது. இந்த விபத்துக்கான காரணங்கள் தெரியவில்லை இருப்பினும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பெரும் சத்தத்தை கேட்டதாகவும்இ பின் தீப்பொறியையும், புகையையும் கண்டதாக தெரிவித்துள்ளனர்” – என்றார்.

விபத்து நேர்ந்த ரயிலில் 310 பேர் பயணம் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த ரயில் தடமானது தாய்வானிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமானது.

ரயிலில் வெளிநாட்டவர்கள் யாரேனும் பயணம் செய்தனரா? என்று சோதனை செய்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *