வவுனியாவில் கோர விபத்து! ஒருவர் பலி!! ஐவர் படுகாயம்!!!
வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றை ஏற்றிச் சென்ற டிரக்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது லொறியில் மற்றும் டிரக்டரில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர். லொறியில் பயணித்த மரியதாஸ் மோஹனதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.