சரக்கடித்து சண்டையிட்ட கணவரை உலக்கையால் அடித்துக்கொன்றார் மனைவி!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் குடித்து விட்டு தகராறு செய்த கணவனை மனைவியே உலக்கையால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான லட்சுமணன் (42), சங்கரன்கோவில் தெற்கு பூலாங்குள பகுதியில் வசித்து வந்தார்.

அவருக்கு கிடைத்து வந்த தினசரி கூலியை வீட்டிற்கு கொடுக்காமல் குடித்து வீணடித்து வந்துள்ளார். இதன் காரணமாக லட்சுமணனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே சண்டை வருவதும், அதனால் லட்சுமியை லட்சுமணன் அடித்து உதைத்து சித்ரவதை செய்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

நேற்றும் இதேபோல குடித்து விட்டு வீட்டிற்கு வந்த லட்சுமணன், மேலும் குடிக்க மனைவியிடம் காசுக்கேட்டு தகராறு செய்துள்ளார். மனைவி லட்சுமி காசு தர மறுக்க, அவரை அடித்து உதைத்துள்ளார் லட்சுமணன். லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, தம்பதிகளை சமாதனப்படுத்தியுள்ளனர்.

பிறகு பிரச்னை தீர்ந்து லட்சுமணன் வீட்டிற்கு வெளியில் பாயை விரித்து படுத்து உறங்கத்தொடங்கினார். எப்போதும் போல இல்லாமல், கணவன் கையால் தினமும் அடிவாங்கிய லட்சுமிக்கு நேற்றைய சம்பவம் மிகுந்த ஆத்திரத்தை கொடுத்தது. இதனால் அதிகாலை மூன்று மணியளவில் லட்சுமி வீட்டிலிருந்த உலக்கையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

மது போதையில் குடித்து விட்டு தகராறு செய்யும் கணவர்களின் கொடுமை பொறுக்க முடியாமல், அவர்களது மனைவிகளே உயிருக்கு எமனாய் மாறும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சங்கரன்கோவிலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *