4 ஆண்டுகளின் பின்னர் கூடியது பாதுகாப்பு ஆலோசனைக் குழு!

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அமைச்சுடன் தொடர்பிலான விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தன், மஹிந்த சமரசிங்க, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, மஹிந்த யாப்பா அபேவர்தன, மயந்த திஸாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, எஸ்.எம்.மரிக்கார், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *