மழையினால் அழிவடைந்தன மரக்கறிகள்! மீண்டும் உயர்வடைந்தன அதன் விலைகள்!!
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
நாட்டில் நிலவிய மழையுடனான சீரற்ற காலநிலையால், மரக்கறிகளின் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளது என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சுமார் 60 வீதமான மரக்கறிகள் மழையினால் அழிவடைந்துள்ளது எனவும் அது தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வாரத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மேலும் கூறியுள்ளது.
தக்காளி, கறிமிளகாய், லீக்ஸ் உள்ளிட்ட சில மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.