இன்றைய இராசி பலன் – 14.10.2018 (ஞாயிற்றுக்கிழமை)

இன்றைய இராசி பலன் – 14.10.2018 (ஞாயிற்றுக்கிழமை)
மேஷம்: எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். குடும்பத்தினர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவீர்கள். பணவரவில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செலவு செய்ய வேண்டாம்.
ரிஷபம்: கடந்த கால அனுபவத்தால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி திருப்திகரமாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். மாமன், மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
மிதுனம்: சிரமங்களை வெல்லும் திறன் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். ஆதாயம் பன்மடங்கு உயரும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பர்.
கடகம்: சுயபெருமை பேசுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சிறக்க கூடுதல் பணிபுரிவது அவசியம். வருமானம் சுமாராக இருக்கும். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர்.
சிம்மம்: அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது நல்லது. கூடுதல் உழைப்பால் தொழில், வியாபார நடைமுறை சீராகும். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். தொழிற்சாலை பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.
கன்னி: நற்செயலில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவர்.
துலாம்: உறவினர்களிடம் உங்கள் மீதான மதிப்பு உயரும். தொழில், வியாபாரம் செழிக்க நவீன சீர்திருத்தம் அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.
விருச்சிகம்: முன்னர் செய்த உதவிக்கு நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி மேற்கொள்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். உறவினரிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகும். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர்.
தனுசு: உங்கள் சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற தாமதமாகலாம். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக செயல்படுவர்.
மகரம்: பொதுநல சிந்தனை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.
கும்பம்: சவால்களை வெல்லும் திறன் பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். பெண்கள் விருந்து, விழாவில் பங்கேற்பர்.
மீனம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்த வேண்டாம். பணவிஷயத்தில் விழிப்புடன் செயல்படவும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை தவிர்க்கவும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *