இன்றைய இராசி பலன் 12.10.2018 வெள்ளிக்கிழமை
புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் நலனில் சற்று கவனம் தேவைப்படும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை நீங்களே செய்வது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.










