‘உண்மையை காலம் சொல்லும்’ – பாலியல் குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து விளக்கம்

தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையைச் சொல்லும் என வைரமுத்து  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுள்ளார்.

வைரமுத்து மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அது தொடர்பான ட்வீட்டை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை பிரபல நடிகைகள் எழுப்பி வரும் நிலையில், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியை தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்தனர். ஹாலிவுட் திரையுலகில் இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.

வைரமுத்து விளக்கம் :


தன் மீதான பாலியம் புகார் குறித்து வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *