அமெரிக்காவை மிரட்டும் ‘மைக்கல்’ சூறாவளி
அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநில வளைகுடாப் பகுதியில் பாரிய சூறாவளி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய அழிவுகளையும் சேதங்களையும் இது ஏற்படுத்தும் எனவும் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
‘மைக்கல்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சூறாவளி, புளோரிடாவிற்குள் நுழையும்போது வலுக் குறைந்த நிலையில் இருந்ததுடன், தற்போது அது மிகவும் வலுவடைந்து, அமெரிக்காவின் கிழக்குக் கரையோரங்களை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்தச் சூறாவளியினால் 2 – 7 சென்ரிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதுடன், வௌ்ளம் ஏற்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூறாவளி அமெரிக்காவிற்குள் நுழையும் முன்னர், கியூபாவில் கடும் மழையுடன் கூடிய கடுங்காற்றினால் பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.