EastLocal

திருமலை கடலில் கவிழ்ந்தது தோணி! குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப மரணம்!!

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனக்குடா கடல் பகுதியில் தோணியொன்று, இன்று திங்கட்கிழமை மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைப் பிறப்பிடமாகவும் வெள்ளைமணல், சீனக் குடா எனும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏ.சக்கரியா (வயது – 47) என்பவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

தூண்டில் மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற மூவரின் தோணி கவிழ்ந்ததில் நீச்சல் தெரியாத நபரே உயிரிழந்துள்ளார் எனவும், ஏனைய இருவரும் நீந்தித் தப்பித்துள்ளனர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவருகின்றது.

சடலம், பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading