பன்னிரு வேங்கைகளுக்கு தீருவிலில் மக்கள் அஞ்சலி!

இந்திய – இலங்கை கூட்டுச் சதியால் தற்கொடையான குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று மக்களால் யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – தீருவில் அரங்கில் அனுஷ்டிக்கப்பட்டது.

தற்கொடையான பன்னிரு போராளிகளுள் ஒருவரின் 96 வயதுடைய தாயார் பொதுச்சுடரை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தினார்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூத்த பிரஜைகள்,பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *