இலங்கையின் அழகிய கடற்கரைகளை இலகுவாகச் சென்றடைய வழிவகுக்கும் UberHIRE

உலகின் மிகப் பெரிய பயணப் பகிர்வு நிறுவனமான Uber கொழும்பு நகரில் UberHIRE சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையின் மூலம், பாவனையாளர்கள் முழு நாளுக்குரிய பயணத்தையும் பதிவு செய்து, அவர்களுக்கு தேவையான இடங்களில் நிறுத்தி வைத்திருந்து பயணத்தை மேற்கொள்ள முடியும்.

பயனாளிகளின் கேள்வி மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத் தேவைகளை நன்கு விளங்கிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள UberHIRE , தற்போது மிகவும் தேவையான ஒன்றாக மாறியுள்ளது.

இது, பயணிகளுக்கு இலாபகரமான, இலகுவான, நம்பிக்கையான போக்குவரத்து முறையைப் பெற்றுக் கொடுக்கிறது. இந்தச் சேவை மூலம், பாவனையாளர்கள் Uber  ஐ பகல் – இரவு எந்தவொரு பயணத்திற்கும் பயன்படுத்த முடியும். பல்வேறு சந்திப்புக்களைக் கொண்ட வர்த்தகப் பயணமாகவோ, அழகிய இடங்களைப் பார்வையிடுவதற்காக செல்லும் சுற்றுலாப் பயணமாகவோ எதற்கும் இது உகந்தது.

கொழும்பில் UberHIRE இன் அறிமுகத்துடன் எதிர்வரும் பண்டிகைக் காலம் பல சுற்றுப் பயணங்களை மேற்கொள்ள உள்ள மற்றும் நண்பர்களோடு பல்வேறு உணவகங்களுக்கு செல்லவுள்ள பயணிகளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

தங்களது தேவைகளுக்கு அமைய பொதுவறை சீரூந்து (hatchback) மற்றும் சரக்கறை சீரூந்து (sedan) வாகனங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். HIRE GO மற்றும் HIRE PREMIER ஆகிய முறைகளில் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

HIRE GO  சேவையை குறைந்தது இலங்கை ரூபா 525 க்கும் HIRE PREMIER சேவையை குறைந்தது இலங்கை ரூபா 855 க்கும் பெற்றுக்கொள்ள முடியும். (ஒரு மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்) இந்தப் புதிய அறிமுகத்தின் மூலம் இலங்கையில் Uber  இன் சேவைகள் மேலும் விருத்தியடைந்துள்ளன.

இப்போது ZIP, GO, PREMIER, INTERCITY GO, INTERCITY PREMIER, HIRE GO  ; HIRE PREMIER ஆகிய சகல சேவைகளையும் கொழும்பு நகரில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட Uber  ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அன்கிட் குப்தா,

‘கொழும்பு நகரில் UberHIRE ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் தொழில் நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு தங்களது முழு நாள் பயணத்தையும் இலாபகரமாகவும், நம்பிக்கையுடனும் மேற்கொள்ள முடியும்.

பல்வேறு பயண முடிவுகளைக் கொண்ட நீண்ட பயணங்களுக்கு இது மிகவும் உகந்ததாகும். பண்டிகைக் காலத்தை அண்மித்துக் கொண்டிருக்கும் நாம் கொழும்பு நகரில் அதிகளவு பயணிகளை எதிர்பார்க்கின்றோம். ருடிநசர்ஐசுநு மூலம் இவர்களுக்கு சிறந்த போக்குவரத்து தேவையைப் பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்” என்று கூறினார்.

இலங்கை சந்தையில் அறிமுகமாகியுள்ள இந்தச் சேவை Uber  னால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய அறிமுகமாகும். முதல் முறையாக இது கொழும்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

UberHIRE இன் முக்கியத்துவம் என்னவென்றால், முழு நாளும் பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கும் ஒரு பயணிக்கு இது ஒருமித்த தீர்வைப் பெற்றுக்கொடுக்கிறது. இதற்கான கொடுப்பனவு நிரந்தரக் கட்டமாக அறவிடப்படாது, பாவனையாளர் பயன்படுத்தும் அளவுக்கு மாத்திரமே செலுத்த முடியும் என்பன ருடிநசர்ஐசுநு லுள்ள ஏனைய நன்மைகளாகும்.

ஆரம்ப சேவைப் பகுதிகள் (எதிர்வரும் வாகனங்களில் அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது)

இது எவ்வாறு செயற்படுகிறது?

1. உங்களது Uber App இனைச் செயற்படுத்தவும்.
2. உங்களை ஏற்ற வேண்டிய இடம் மற்றும் இறக்க வேண்டிய இடங்கள் என்பனவற்றைக் குறிப்பிட்டு UberHIRE ஐக் கோரவும்.
3. உறுதிப்படுத்தியதும் வாகன சாரதிகளின் விபரங்களை பெயர், புகைப்படம் மற்றும் வாகனத்தின் விபரங்களோடு பாவனையாளர்களுக்கு பார்க்கக்கூடியதாக இருக்கும்.
4. உங்களது பயண முடிவின் போது நீங்கள் பயணித்த தூரம் மற்றும் காலப்பகுதி என்பன கணக்கிடப்பட்டு, மொத்தக் கட்டணமும் அறிவிக்கப்படும். பணமாக அல்லது அட்டை மூலம் கொடுப்பனவை மேற்கொண்டு ஈ பற்றுச்சீட்டு ஒன்றையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

Uber பற்றி

நம்பிக்கையான போக்குவரத்தை அனைவருக்கும் சகல இடங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே ருடிநச ரின் இலக்காகும். 2010 ஆம் ஆண்டில் நாம் மிகச்சிறிய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அதாவது ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பயணத்தைப் பகிர்ந்துகொள்வது எவ்வாறு என்ற கேள்விக்கு பதிலைத் தேடும் வகையில் எமது சேவையை ஆரம்பிக்கப்பட்டது. எமது சேவை மூலம் 7 வருடங்களில் 10 பில்லியனுக்கும் அதிகமான பயணங்களை நாம் மக்களுக்கு வழங்கியுள்ளோம். எமக்கு அதிகளவு மக்களை குறைந்தளவு வாகனங்களில் உள்ளடக்கி சூழல் மாசடைவதையும் நெரிசலையும் இல்லாதொழிக்கும் பெரிய சவால்கள் எமக்கு விடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *