இலங்கையர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த நோய்

இலங்கையர்களில் நான்கு பேருக்கு ஒருவர், உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளின் படி, 25 தொடக்கம், 28 வீதம் வரையான இலங்கையர்கள், உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழக மருந்தியல் திணைக்களத்தின் மூத்த பேராசிரியரும், தேசிய மருந்துகள், ஒழுங்கமைப்பு அதிகாரசபையின்  தலைவருமான, பேராசிரியர் அசித டி சில்வா இந்த தகவலை வெளியிட்டார்.

கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“16 தொடக்கம் 18 வீதம் வரையான இலங்கையர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

தொற்றா நோய்கள் சிறிலங்காவுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.

கிராமப் புறங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பங்கேற்ற 850 பேரில் 80 வீதமானவர்கள் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி அறிவு உள்ளவர்கள். வசதியானவர்கள், உடற்பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் ” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *