மன்னார் மனிதப்புதைகுழியின் மர்மம் நீடிப்பு – மீண்டும் அகழ்வுப் பணி ஆரம்பம்!

மன்னார் மனிதப்புதைகுழியில் இன்று (01) முதல் மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன என்று களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.


மேற்படி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 143 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதமே அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. அகழ்வுப் பணிக்குரிய நிதிப்பொறுப்பை காணாமல்ஆக்கப்பட்டடோர் பணியகம் பொறுப்பேற்றுள்ளது.

மன்னார் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி, விசேட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ, உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் தலைமையில்
அகழ்வுப் பணிகள்,  நடைபெறுகின்றன.

இப்புதைகுழி தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அதிலிருந்து மீட்கப்படும் மனித எச்சங்கள் எக்காலத்துக்குரியவை என கண்டறிவதற்காக சில உடற்பாகங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல்ஆக்கப்பட்டவர்களின் சடலங்களாக இவை இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளதால்தான் இதுவிடயத்தில் பணியகம் தலையிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *