வெளிநாட்டவர்களால் இலங்கையில் மீண்டும் தலைதூக்குகின்றது மலேரியா! – 35 பேர் பாதிப்பு

இலங்கையில் கடந்த எட்டு ஒன்பது மாதங்களில் 35 பேர் மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்த 11 இலங்கைப் பிரஜைகளும், 24 வெளிநாட்டு பிரஜைகளும் இதில் உள்ளடங்குகின்றனர் என மலேரிய ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தென் சூடான், மடகஸ்கார், எத்தியோப்பியா மற்றும் உகண்டா பிரஜைகள் அடங்குவதுடன் இந்தியாவைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த 6 வருடங்களாக நாட்டில் எவரும் மலேரியா காய்ச்சலுக்கு இலக்காகவில்லை எனவும் மலேரியா ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களும் வைத்தியர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் மலேரியா ஒழிப்புப் பிரிவு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
=

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *